தங்கம் விற்க புதிய சட்டம், எதிர்ப்பு தெரிவித்து, கடையடைப்பு போராட்டம்
தங்கம் விற்பனை செய்ய கொண்டு வரப்படும் புதிய சட்டத்தை எதிர்த்து நகைக்கடை உரிமையாளர்கள் கடையடைத்து போராட்டம் நடத்தினர்.
இந்திய தர நிர்ணய ஆணையம் சார்பில் நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் விற்கப்படும் தங்க நகைகளுக்கு இனி புதிய ஹால்மார்க் தர அடையாள எண் கொண்ட நிரந்தர முத்திரை பெற வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
இது நகை கடைகள் மற்றும் நகை தொழிலாளர்களுக்கு எதிரானது என கூறி புதிய அறிவிப்பிற்கு நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிய அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடையாள போராட்டமாக 400 க்கும் மேற்பட்ட நடைகடைகள் அடைக்கப்பட்டன.
மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகை கடைகள் அடைக்கப்பட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu