வேளாண் சட்டம் போன்று தேசிய கடல்வள மசோதாவையும் ரத்து செய்ய கோரிக்கை
கன்னியாகுமரியில் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அகில உலக மீனவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அகில உலக மீனவர் தினம் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை கோட்டாறு மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் அருள்பணியாளர் டென்ஸ்டன் கூறும் போது அகில உலக மீனவர் தின நாளில், மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு சில கோரிக்கைகளை நாங்கள் முன் வைத்திருக்கிறோம்.மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும், இந்திய தேசிய கடல் மசோதாவை ரத்து செய்ய வேண்டும், மூன்று வேளாண்மை சட்டங்களை ரத்து செய்தது போல தேசிய மீனவர் மசோதாவையும் ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.
மீனவர்களுக்கு வரியில்லா டீசல் வழங்க வேண்டும், ஆழ்கடலில் மீன் பிடி தொழில் செய்யும் போது பல்வேறு இடையூறுகள் ஆபத்துகளில் சிக்கித் தவிக்கும் மீனவர்களுக்கு சர்வதேச அளவில் அவர்களுக்கு உதவிகள் பெறுவதற்கு வசதியாக தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.
அந்த அடையாள அட்டை மூலம் சர்வதேச கடல் பகுதிகளில் அவன் ஒரு இந்திய குடிமகன் என்ற உரிமையைப் பெற முடியும், காணாமல் போன மீனவர்களை தேடி கண்டுபிடிக்க கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ள கடல் ஆம்புலன்ஸ் போன்ற வசதியை தமிழக அரசும் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் செய்ய முன்வரவேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu