போலீசாரின் துப்பாக்கி மரியாதையுடன் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு

போலீசாரின் துப்பாக்கி மரியாதையுடன்   முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு
X

தமிழக, கேரளா போலீசாரின் துப்பாக்கி ஏந்திய மரியாதையுடன் திருவனந்தபுரம் புறப்பட்டது குமரி முன்னுதித்த நங்கை அம்மன்

தமிழக, கேரளா போலீசாரின் துப்பாக்கி ஏந்திய மரியாதையுடன் குமரி முன்னுதித்த நங்கை அம்மன் திருவனந்தபுரம் புறப்பட்டது .

நாடு முழுவதும் நவராத்திரி விழா வரும் 6 ஆம் தேதி தொடங்கும் நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் பத்பநாபபுரம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு செல்வது வழக்கம்.

திருவாங்கூர் சமஸ்தான மன்னர் காலம் முதல் குமரியில் இருந்து சுவாமி சிலைகள் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டு நவராத்திரி பூஜைகளுக்கு பின்னர் மீண்டும் குமரிக்கு கொண்டு வருவது வழக்கம்,

அதன்படி சுவாமி புறப்பாடின் முதல் நிகழ்ச்சியாக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

அதன் படி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலில் இருந்து பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது குமரி மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் தலைமையில் தமிழக-கேரள போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செய்தனர்.


தொடர்ந்து இன்று பத்பநாபாபுரம் அரண்மனை கொண்டு செல்லப்பட்டு நாளை அரண்மனையில் மன்னர் உடைவாள் முன் செல்ல திருவனந்தபுரத்திற்கு சுவாமி ஊர்வலம் நடைபெறும்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா