சூரசம்ஹாரம் விழாவுக்கு அனுமதி: முதல்வருக்கு எம்.ஆர் காந்தி கோரிக்கை

சூரசம்ஹாரம் விழாவுக்கு அனுமதி:  முதல்வருக்கு எம்.ஆர் காந்தி கோரிக்கை
X

 எம்.ஆர்.காந்தி 

குமரியில், சூரசம்ஹாரம் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என, முதல்வருக்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள், தொழில் கூடங்கள் மூடப்பட்டன.

தற்போது கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் வெகுவாக மீண்டுள்ள நிலையில், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், பேருந்துகள், ரயில்கள் இயங்க தொடங்கி உள்ளன. ஆனால் இந்துக்களின் பண்டிகையான சூரசம்காரம், கந்தசஷ்டி போன்றவை மாநில அரசால் தடை செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் தடை நீடிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவை காரணம் காட்டி தடை விதித்துள்ள இந்துக்களின் ஆலய விழாக்களை, தடையின்றி நடத்த கேட்டுக் கொள்கிறேன். ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழா, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இந்த ஆண்டும் பழமை மாறாமல் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனுவில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!