மலையில் தீ விபத்து- மூலிகை செடிகள் கருகின

மலையில்  தீ விபத்து- மூலிகை செடிகள் கருகின
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் மருந்துவாழ் மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூலிகை செடிகள் கருகியது.

மருந்துகளுக்கு பயன்படுத்தும் மூலிகை செடிகள் அதிகம் காணப்படும் மலை என்பதால் மருந்து வாழ் மலை என பெயர் பெற்ற இந்த மலை கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் காரணமாக வறண்டு காணப்பட்டது.இந்நிலையில் இந்த மலையில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால் தீ வேகமாக பரவத் தொடங்கியது.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் பூதப்பாண்டி வனசரகர் திலீபன் தலைமையில் வன ஊழியர்கள் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.பெரும் போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்ட நிலையில் இந்த விபத்தில் பல அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
ai and business intelligence