மத்திய அர சின் சட்டத்துக்கு எதிராக குமரியில் மீனவர்கள் அமைதி ஆர்ப்பாட்டம்

மத்திய அர சின் சட்டத்துக்கு எதிராக குமரியில் மீனவர்கள் அமைதி ஆர்ப்பாட்டம்
X

தேசிய கடல்வள புதிய சட்டத்தை எதிர்த்து குமரியில்  மீனவர்கள் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தேசிய கடல்வள புதிய சட்டத்தை எதிர்த்து குமரியில் 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வர இருக்கும் தேசிய கடல்வள மேலாண்மை ஒழுங்கு முறை சட்டம் 2021-க்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு மீனவ அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

அரசியல் கட்சி தலைவர்களும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சின்னவிளை மீனவ கிராமத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி அமைப்பு சார்பில் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் நடைபெற்ற ஆர்பாட்டத்தை தி.மு.க குமரி மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் தொடங்கி வைத்தார்.

சின்னவிளை, பெரியவிளை, மண்டைக்காடு உட்பட சுமார் 9-மீனவ கிராமங்களை சேர்ந்த பெண்கள் சிறுவர்கள் மீனவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ,வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கலந்து கொண்டனர். கடற்கரையில் நடைபெற்ற அலைகடல் கண்டன ஆர்பாட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், முன்னாள் எம்எல்ஏ க்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு