திருவிழாவில் காணாமல் போன குழந்தை மீட்பு: போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு

திருவிழாவில் காணாமல் போன குழந்தை மீட்பு: போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு
X

பைல் படம்.

திருவிழாவில் காணாமல் போன குழந்தையை மீட்டு கொடுத்த போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற பழமை வாய்ந்த கோவிலாக உள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் இந்த கோவிலில் மாசி கொடை விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவிழாவின்போது கடியன்கோடு பகுதியை சேர்ந்த அசோக் என்பவருடைய குழந்தை கூட்டத்தில் திடீரென காணாமல் போனது.

அந்த குழந்தையை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தென்காசி மாவட்ட காவல்துறை பயிற்சி சார்பு ஆய்வாளர் பசுபதி மற்றும் தலைமை காவலர் சுடலைமுத்து, முதல்நிலைக் காவலர் கணேசமூர்த்தி ஆகியோர் மீட்டு தவறவிட்ட பெற்றோரிடம் விசாரணை செய்து ஒப்படைத்தனர்.

காணாமல் போன குழந்தையை மீட்டுக் கொடுத்த போலீசாரை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் சக போலீசார் வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!