/* */

நுண்துளை அறுவை சிகிச்சை பயிற்சி கருத்தரங்கம் - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

குமரியில் நுண்துளை அறுவை சிகிச்சை பயிற்சி கருத்தரங்கத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நுண்துளை அறுவை சிகிச்சை பயிற்சி கருத்தரங்கம் - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
X

கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் டெரிக் சந்திப்பு அருகில் அமைந்துள்ள மத்தியாஸ் அரங்கில் நுண்துளை அறுவை சிகிச்சை பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்த கருத்தரங்க நிகழ்ச்சியில், தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு தொடங்கி வைத்ததோடு மருத்துவம் சார்ந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.

அப்போது மருத்துவ பணி என்பது மிக சிறந்த பணி எனவும், சமூகத்தின் வளர்ச்சியின் அடிப்படையாக கல்வி மற்றும் மருத்துவம் கடைபிடிக்கப்படுகிறது, மருத்துவ கல்வி பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களும் தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப புதிய தொழில்நுட்பத்தோடு மருத்துவம் கற்க முன்வர வேண்டும் என்றார். மேலும் மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் தங்களிடம் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் கனிவுடனும், அவர்களுடைய நோயின் தன்மையினை முற்றிலுமாக அறிந்து சிகிச்சை அளிக்க முன்வர வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி, மருத்துவமனை முதல்வர் திருவாசகமணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 April 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  2. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  5. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  6. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  7. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  8. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  9. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்