குமரியில் மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் பொங்கல் விழா

குமரியில் மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் பொங்கல் விழா
X
மீனச்சல் கிருஷ்ணசுவாமி கோவில்.
குமரியில் பிரசித்தி பெற்ற மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில் பொங்கல் விழா அரசின் கொரோனா விதிமுறைகளுடன் நடைபெற்றது.

கொரோனா, ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த பொங்கல் பண்டிகை காலங்களில் 14 ஆம் தேதி முதல் 18 வரை கோயில்களில் பொதுமக்கள் வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதனால் கோயில்கள் மக்கள் கூட்டம் இல்லாமல் களை இழந்து காணப்படுகிறது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராம கோயில்களில் கொரோனா கட்டுப்பாடுகளை பின் பற்றி பொங்கல் விழா நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் கிராம மக்கள் மற்றும் சமய வகுப்பு மாணவர்கள் இணைந்து கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு கோல போட்டிகள் போன்ற பல்வேறு தமிழ் கிராமிய கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தினர்.

இதில் ஏராளமான சிறுமிகள், பெண்கள் உட்பட கிராம மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அரசின் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கலந்து கொண்டனர்.

Tags

Next Story