முதல்வரிடம் ஆசி பெற்ற நாகர்கோவில் மாநகராட்சி மேயர்

முதல்வரிடம் ஆசி பெற்ற  நாகர்கோவில் மாநகராட்சி மேயர்
X

தமிழக முதல்வரிடம் ஆசி பெற்ற நாகர்கோவில் மேயர் மகேஷ்

முதல்வரை சந்தித்த நாகர்கோவில் மேயர் தனது வெற்றி சான்றிதழை கொடுத்து ஆசி பெற்றார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்ற மறைமுக தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது.

நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மகேஷ் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயர் மகேஷ் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.அவருடன் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..