குமரியில் சரணகோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
கேரளாவில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நாட்களில், பல லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை சென்று சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு வருடங்களாக கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வருடம் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக, நேற்றுமுன்தினம் மாலை கோவில் நடை திறக்கப்பட்டது.
தமிழ் பஞ்சாங்கப்படி, இன்று கார்த்திகை 1 தொடங்கும் நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் விரதம் தொடங்கினர், அதன்படி கேரளா தமிழக எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பார்வதிபுரம் ஐயப்பன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் அதிகாலை முதல் கூடிய பக்தர்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu