தொடர் குற்ற செயலில் ஈடுபட்டவர் குண்டாசில் கைது

தொடர் குற்ற செயலில் ஈடுபட்டவர் குண்டாசில் கைது
X

பைல் படம்

குமரி மாவட்டத்தில் தொடர் குற்ற செயலில் ஈடுபட்டவர் குண்டாசில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வடசேரி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் 24 வயதே ஆன இவர் மீது கோட்டார், சுசீந்திரம், ஈத்தாமொழி, மற்றும் ராஜாக்கமங்களம் காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல், அடிதடி என பல்வேறு வழக்குகள் உள்ளது.

சிறு வயது என்பதால் திருந்தி வாழ பல சந்தர்ப்பங்கள் வந்த நிலையிலும் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் போலீசார் எச்சரித்தனர்.

ஆனால் ரஞ்சித் குமார் போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார், இந்நிலையில் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

இந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ரஞ்சித் குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார், அதன்படி ரஞ்சித் குமாரை கோட்டார் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்