லக்கி பிரைஸ் விழுந்துள்ளது என கூறி புதிய மோசடி - காவல்துறை எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ரிஜிஸ்டர் தபால் மூலம் Naptol Online Shopping pvt ltd கம்பெனி ஆண்டு விழாவை முன்னிட்டு குலுக்கலில் லக்கி பிரைஸ் 6 பேருக்கு விழுந்துள்ளது என்றும் அதில் ஒரு நபர் நீங்கள் தான் என்று கடிதம் வந்துள்ளது.
அந்த கடிதத்தில் கொடுக்கப்பட்டிருந்த படிவத்தில் உங்களுக்கு 12 லட்சத்து 50,000 ரூபாய் ருபாய் லக்கி பரிசாக விழுந்துள்ளது என்றும் அது கிடைக்க இந்த படிவத்தில் உள்ள உங்கள் வங்கி விபரங்கள், ஆதார் கார்டு, பான் கார்டு விபரங்கள் அனைத்தையும் நிரப்பி குறிப்பிட்ட ஒரு நம்பருக்கு whatsapp செய்யுங்கள் என்று குறிப்பிடபட்டிருந்தது.
இது குறித்து சம்பந்தப்பட்ட Naptol நிறுவனத்திற்கு காவல்துறை சார்பாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டதில் அப்படி ஒரு குலுக்கல் லக்கி பரிசு தங்கள் நிறுவனம் நடத்தவில்லை என்றும் வாடிக்கையாளர்களுக்கு இது போன்று கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்பதை தெரிவித்தது.
லக்கி வின்னர் 6 பேர் என்று தபாலில் குறிப்பிடபட்டிருக்கும், ஆனால் மாவட்டத்தில் பல பேருக்கு இது போன்று தபால் மூலம் கடிதம் அனுப்பி வங்கி விபரங்களை பெற்று பணத்தை மோசடி செய்ய முயற்சித்துள்ளனர்.
எனவே பொதுமக்கள் இது போன்று வரும் கடிதங்களுக்கோ, மொபைலில் வரும் மெஸ்சேஜ்களுக்கோ தங்கள் வங்கி, ஆதார், பான் போன்ற விபரங்களை அளிக்க வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu