இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் உதவி; கன்னியாகுமரி ஆட்சியர் தகவல்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், குமரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் ஆரம்பிக்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு உற்பத்தி பிரிவிற்கு ரூபாய் 25 லட்சம் மற்றும் சேவை பிரிவிற்கு ரூபாய் 10 லட்சம் வரையிலான திட்டங்களுக்கு வங்கி மூலம் கடன் வழங்கப்படுகிறது.
உற்பத்திப் பிரிவின் கீழ் ரூபாய் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவை பிரிவின் கீழ் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு தொழில் செய்யும் பஞ்சாயத்து மற்றும் சமூகப் பிரிவைப் பொறுத்து 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மானியமாக வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் www.kviconline.gov.in/pmegpeportal என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும், இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை நிரப்பி, தேவையான ஆவணங்கள் பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu