குடியரசு தின நாளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை : குமரியில் 24 பேர் கைது

குடியரசு தின நாளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை : குமரியில் 24 பேர் கைது
X

போலீசாரால் கைப்பற்றப்பட்ட மது பாட்டில்கள்.

குமரியில் குடியரசு தின நாளில் கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் கள்ள சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு தொடர் புகார்கள் வந்தன.

இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மது விற்பனை குறித்து கண்காணிப்பையும், சோதனையையும் தீவிரபடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் மாவட்டம் முழுவதும் கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story
ai in future agriculture