சிங்க ஆண்டு பிறப்பு - கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

சிங்க ஆண்டு பிறப்பு - கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
X

பைல் படம்

ஆவணி மாதம் எனும் மலையாள சிங்க ஆண்டு தொடங்கியதையொட்டி குமரி மாவட்ட கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கேரளா மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை கடந்த 11 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

வரும் 21 ஆம் தேதி திருவோண பண்டிகை கொண்டாடப்பட உள்ளது, இதனிடையே சிங்க ஆண்டு என்று அழைக்கப்படும் மலையாள வருடப்பிறப்பான ஆவணி மாதம் இன்று தொடங்கியது.

பொதுவாக சுப முகூர்த்தங்களுக்கு ஆகாத மாதம் என்று கூறப்படும் ஆடி மாதம் முடிந்து விஷேச காலங்கள் நிறைந்த ஆவணி மாதம் தமிழர்களாலும் போற்றப்படும் மாதமாக அமைகிறது.

இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

சுசீந்திரம் தானுமாலயன் சுவாமி கோவில், நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உட்பட மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!