நவராத்திரியை முன்னிட்டு மின்விளக்குகளால் ஜொலித்த குமரி

நவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் மின் விளக்குகளால் ஜொலித்தன.

நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை மன்னர் தகாலம் தொட்டு நவராத்திரி விழா விமரிசையாக நடைபெருவது வழக்கம்.

அதன்படி கடந்த 9 நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது.

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

நாகர்கோவில் மாநகர் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் வேப்பமூடு பகுதியில் ஏராளமான மரங்கள் மின்னொளியில் ஜொலித்த காட்சி அங்கு வந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனிடையே மாவட்டம் முழுவதும் ஆட்டோ நிறுத்தங்கள் வாடகைக்கார் நிறுத்துங்கள், கோவில்கள், வீடுகளில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture