மண்டைக்காடு கோவிலில் ஆகம விதிப்படி திருப்பணி செய்யக்கோரி மறியல்

மண்டைக்காடு கோவிலில் ஆகம விதிப்படி திருப்பணி செய்யக்கோரி மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள். 

குமரி மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலை, ஆகம விதிப்படி திருப்பணி செய்யக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், கடந்த ஜூலை மாதம் 2-ம் தேதி தீ விபத்திற்கு உள்ளானது. கோயில் கருவறை மேற்கூரைகள் முற்றிலும் எரிந்தது. இதனையடுத்து கோயிலை பார்வையிட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம், கோயிலை பிரசனம் பார்த்து ஆகம விதிப்படி திருப்பணிகளை செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் பிரசன்னம் பார்க்கப்பட்டு திருபணிக்காக 1 கோடியே 80-லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று அந்த திருப்பணியினை தொடங்கி வைக்க அமைச்சர் சேகர்பாபு வருகை தந்தார். கோயில் திருப்பணிகள் ஆகம விதிப்படி நடக்க ஏற்பாடு செய்யவில்லை என்றும் அதிகாரிகள் திருப்பணிகள் குறித்த எந்த தகவலையும் வெளிப்படையாக தெரிவிக்காமல் பணிகளை தொடங்க இருப்பதாகவும் குற்றம்சாட்டி, இன்று காலை மண்டைக்காடு கோயில் முன் குவிந்த இந்து அமைப்பினர், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்து அமைப்பினர், தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வந்த நிலையில், டிஐஜி பிரவின் குமார் அபினபு தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர், இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற நிலையில் போலீசார் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அரசு பேருந்தில் அழைத்து சென்று அருகில் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil