அரசு பள்ளி ஆசிரியர் வீட்டு கதவை உடைத்து நகை, 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை

அரசு பள்ளி ஆசிரியர் வீட்டு கதவை உடைத்து நகை,  2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை
X
குமரியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டு கதவை உடைத்து 30 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தலகுறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் வில்சன், கிரேஸ்மேரி தம்பதியர். வில்சன் மரணம் அடைந்துள்ள நிலையில் 57-வயதான கிரேஷ்மேரி புதுக்கோட்டையில் தங்கி தனது ஆசிரியர் பணியை தொடர்ந்து வருகிறார்.

முத்தலக்குறிச்சி ஊரில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை தனது உறவினரான நேசம் என்பவர் கண்காணிப்பில் விட்டு சென்றுள்ளார். இதனிடையே கடந்த ஞாயிற்று கிழமை முத்தலக்குறிச்சியில் உள்ள தனது சொந்த வீட்டில் தங்கிய கிரேஷ்மேரி அன்று மாலை மீண்டும் குடும்பதினருடன் திரும்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில் வீட்டை பாதுகாத்து வந்த நேசம் இன்று காலை வீட்டு தோட்டத்திற்கு தண்ணீர் தெளிக்க சென்ற போது வீட்டின் முன் கதவு திறந்த நிலையில் காணப்பட்டதால் உடனடியாக போலீசாருக்கும் வீட்டு உரிமையாளர் கிரேஷ்மேரிக்கும் தகவல் அளித்தார்.

இந்நிலையில் சம்பவ இடம் வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர், அந்த வீட்டில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதன் உள்ளே இருந்த 30-லட்சம் மதிப்பிலான 75-சவரன் தங்க நகைகள் மற்றும் 2-லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் திருடி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ததோடு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
நாமகிரிப்பேட்டையில் பெண் ஐ.டி ஊழியர் மீது தாக்குதல் - குற்றவாளி கைது