கன்னியாகுமரியில் கொட்டித்தீர்த்த கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X
கோப்பு படம்
By - A. Ananthakumar, Reporter |8 Oct 2021 8:15 PM IST
குமரியில் கொட்டித்தீர்த்த கனமழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் நிலவி வந்த வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது.
மேலும், மழையால் குடிநீர் தேவை நிறைவேறுவதோடு, மலையோர பகுதிகளில் தொடரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாய தேவைகளும் நிறைவேறும் என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu