குமரியில் நாளை நடைபெற இருந்த போராட்டம் ஒத்தி வைப்பு: மாவட்ட பாஜக தலைவர் அறிவிப்பு

குமரியில் நாளை நடைபெற இருந்த  போராட்டம் ஒத்தி வைப்பு: மாவட்ட பாஜக தலைவர் அறிவிப்பு
X
அமைதியை நிலைநாட்டும் வகையில் நாளை அறிவித்திருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது

குமரி மாவட்டத்தில் நாளை நடைபெற இருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட பாஜக தலைவர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் சமீபத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் உள்துறை அமைச்சர் ஆகியோரை கடுமையாக விமர்சித்ததோடு, இந்து மதம், இந்து கோவில்கள், மத நம்பிக்கை போன்றவை குறித்தும் போதகர் ஜார்ஜ் பொன்னையா அவதூறாக விமர்சித்தார்.

மேலும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர், பாஜக தலைவர்கள் மற்றும் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசினார். இதனிடையே கண்டன கூட்டத்தில் கலந்து கொண்டு மேடையில் அமர்ந்து இந்த அவதூறு பேச்சை ஆதரித்த அனைவரையும் கைது செய்ய கூறி குமரி மாவட்ட பாஜக சார்பில் குளச்சலில், நாளை மிகப்பெரிய அளவிலான போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அமைதியை நிலைநாட்டும் வகையில் காவல்துறை தாமாக முன்வந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற மேலும் சில அமைப்புகளின் பொறுப்பாளர்களையும் காவல்துறை கைது செய்யும் என தெரிகிறது. இதனிடையே மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையிலும் நாளை அறிவித்திருந்த ஆர்ப்பாட்ட போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!