அனுமதி இன்றி அமைக்கப்பட்ட குருசடி - பாஜகவின் தொடர் போராட்டத்தால் பரபரப்பாகும் குமரி

அனுமதி இன்றி அமைக்கப்பட்ட குருசடி - பாஜகவின் தொடர் போராட்டத்தால் பரபரப்பாகும் குமரி
X

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே சுற்றுலாதலமான மாத்தூர் தொட்டிபாலம் அருகே கிறிஸ்தவ குருசடி அனுமதி இன்றி அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதனை அகற்ற பாஜக வினர் உட்பட இந்து இயக்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பாஜகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஐக எம்எல்ஏ எம்.ஆர் காந்தி, பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் கைது செய்யப்பட்ட தகவல் பரவிய நிலையில் அதனை கண்டித்து மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது,

இந்நிலையில் பாஜக மாவட்ட தலைவர் மற்றும் எம்எல்ஏ எம்.ஆர் காந்தி உட்பட இந்து இயக்கதலைவர்களுடன் பத்பநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் மற்றும் தக்கலை சரக காவல் துணை கண்காணிப்பாளர் ராமசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் அனுமதியின்றி கட்டபட்ட குருசடியை அகற்ற நடவடிக்கை எடுக்கபடும் எனவும் உடனடியாக குருசடி முழுவதுமாக மறைக்கபடும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடபட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!