குமரியில் 600 காவடிகள் பூஜையில் வைத்து வழிபாடு

குமரியில்  600 காவடிகள் பூஜையில் வைத்து வழிபாடு
X

வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள காவடிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 

குமரியில் காவடி பூஜை விமரிசையாக தொடங்கிய நிலையில் மாவட்டம் முழுவதும் 600 காவடிகள் பூஜைக்கு வைக்கப்பட்டன.

திருச்செந்தூரில் மாசி திருவிழா தொடங்கும் நாளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நடைபெறும் காவடி திருவிழாவில் 41 நாட்கள் விரதம் இருந்து புஷ்ப காவடி, பறக்கும் காவடி, சர்ப காவடி என சுமார் 2000 க்கும் மேற்பட்ட காவடிகளுடன் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குமரியில் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

அதன்படி, திருச்செந்தூரில் இந்த ஆண்டிற்கான மாசி திருவிழா வரும் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 600 க்கும் மேற்பட்ட இடங்களில் காவடிகள் பூஜையில் வைக்கப்பட்டன. நேற்று முதல் நாற்பத்தி ஒரு நாள் பூஜையில் வைக்கப்படும் காவடியானது வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி சர்வ அலங்காரத்துடன் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் படை சூழ திருச்செந்தூருக்கு பாதை யாத்திரையாக புறப்படும்.

Tags

Next Story