குமரியில் ஒரேநாளில் 4000 மதுபாட்டில்கள் பறிமுதல்: 122 பேர் கைது
முழு ஊராடங்கை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீசாரின் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:
முழு ஊரடங்கு தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் 40 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்களை தண்டிக்க வேண்டும் என்பது காவல்துறையின் நோக்கம் இல்லை, நோய் தொற்றை குறைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அவசியம் இல்லாமல் வெளியே வரும் நபர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
வர்த்தக நிறுவனங்கள் வணிகர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம் இதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதுடன் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது,
குமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையகளில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு காவல் நிலையம் வரும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார் மனுக்கள் உடனடியாக விசாரணை நடத்த நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டு உள்ளது,
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில், பதுக்கி வைத்து பிளாக்கில் விற்பனை செய்ய வைக்கப்பட்டு இருந்த 4000 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக 122 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 122 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக, அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu