குமரியில் தடுப்பூசி தட்டுப்பாடு - முறையான அறிவிப்பு இல்லாததால் மக்கள் வேதனை.

குமரியில் தடுப்பூசி தட்டுப்பாடு - முறையான அறிவிப்பு இல்லாததால் மக்கள் வேதனை.
X
குமரியில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் நிலையில் இது குறித்த முறையான அறிவிப்பு இல்லாததால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் சிறப்பு மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

மேலும் மாவட்டம் முழுவதும் 66 மையங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது,இந்நிலையில் தக்கலை, குறும்பனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறப்பு மையங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ள நீண்ட வரிசையில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் 60 நபர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தி விட்டு தடுப்பூசி தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர், பதிவு முறையை அமல்படுத்தி நாள் நேரம் ஒதுக்கினால் இந்த நிலை இருக்காது இதனை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்யாததால் நான்கு நாட்களாக தினமும் வந்து காவல் நின்று ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

இதனிடையே இந்த காட்சிகளை சமூக ஆர்வலர் ஒருவர் ஒளிப்பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் தற்போது இந்த காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!