கன்னியாகுமரியில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் நகை,பணம் கொள்ளை

கன்னியாகுமரியில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில்  நகை,பணம் கொள்ளை
X
கொள்ளை நடந்த வீட்டில் போலீஸ் துப்பறியும் நாய் மோப்பம் பிடித்தது.
குமரியில் அடுத்தடுத்த 2 வீடுகளில் கொள்ளை நடந்த நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப காலமாக கொள்ளை சம்பவங்கள் மற்றும் திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இதனை தடுக்க மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்தும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே குளச்சல் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீடு உட்பட அடுத்தடுத்த இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து ரூ. 30 லட்சம் மதிப்பிலான 75 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவங்களில் துப்பு துலக்க போலீஸ் துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடம் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டார், மேலும் கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவு பிறப்பித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!