நூதன முறையில் மாேசடி: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க எஸ்பி வேண்டுகோள்

நூதன முறையில் மாேசடி: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க எஸ்பி வேண்டுகோள்
X
குமரியில் புதிய யுக்தியில் மோசடி நடைபெறும் நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க எஸ்பி வேண்டுகோள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொபைல் போன் அழைப்பு மூலமாகவும், முகநூல் பக்கம் மற்றும் சமூக வலைத்தளங்களில் போலி விளம்பரங்கள் மூலமாக வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கும்பல் பல்வேறு நபர்களை மோசடி நபர்கள் ஏமாற்றி வருகின்றனர்.

இது போன்ற நூதன மோசடியில் சிக்கி பணத்தை இழந்தவர்கள் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். இந்த சைபர் குற்றங்கள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.

அதன்படி குமரி மாவட்ட போலீசார் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். முன்பின் தெரியாத நபர்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி உங்களிடம் இருந்து விசாவிற்கு பணம் கேட்டு குறிப்பிட்ட வங்கி எண்ணிற்கு, G-Pay, Phone-Pe மூலமாக பணத்தை செலுத்த சொன்னால் உடனே மக்கள் விழித்து கொண்டு மோசடி நபர்களிடம் இருந்து விலகி சைபர் கிரைம் போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளிக்க முன் வர வேண்டும். மேற்கண்ட மோசடியை போன்று ரூபாய் 1,71,000 த்தை விசாவிற்குக்கென குறிப்பிட ஒரு நபர் இழந்துள்ளார்.

மேலும் முகநூல் பக்கம் மூலமாக அறிமுகமாகி வெளிநாட்டிலிருந்து இலவசமாக சில கிபிட் பொருட்கள் தருவதாக கூறி உங்களை நம்ப வைத்து, customs clearance fees மற்றும் Income Tax பணம் செலுத்த அடையாளம் தெரியாத நபர்கள் உங்களை தொடர்பு கொண்டு பணம் கேட்டலோ பொதுமக்கள் யாரும் ஏமாந்து விட வேண்டாம். மேற்கண்ட மோசடி போன்று ஏமாற்றி வரும் நபர்கள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!