குமரியில் மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்பு: எஸ்பி பங்கேற்பு

குமரியில் மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்பு: எஸ்பி பங்கேற்பு
X

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

குமரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மனித உரிமைகள் தினம் உறுதிமொழியை போலீசார் எடுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கலந்து கொண்டார், மேலும் அவர் தலைமையில் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டு மனித உரிமைகள் தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும்,இந்தியாவில் செயல்படுத்தத்தக்க, பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்று உறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன்.

எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன்.

என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும். நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன்.

மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!