இருசக்கர வாகனத்தை கடத்தி பணம் கேட்டு மிரட்டல்

இருசக்கர வாகனத்தை கடத்தி பணம் கேட்டு மிரட்டல்
X
-போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது உறவினர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் ராஜா. இவர் நேற்று முன்தினம் இரவு மணிகண்டனிடம் அவரது இரு சக்கர வாகனத்தை கேட்டுள்ளார். அவர் மறுப்பு தெரிவித்தும் வற்புறுத்தி இருசக்கர வாகனத்தை வாங்கிச் சென்றுள்ளார்.

ஆனால் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் ராஜாவின் செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று ராஜா தொலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ராஜாவுடன் இருசக்கர வாகனத்தை நாங்கள் திருநெல்வேலிக்கு எடுத்துக் கொண்டு சென்றுவிட்டோம் எனவும் , நீங்கள் 30 ஆயிரம் பணத்தை கொண்டு திருநெல்வேலிக்கு வர வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனையடுத்து மீண்டும் தொடர்பு கொண்டு உடனடியாக திடுநெல்வேலிக்கு பணத்துடன் வராவிட்டால் இருசக்கர வாகனத்தை விற்று விடுவோம் என கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ந்து போன மணிகண்டன் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டபோது எதிர் நபர் சரிவரப் பேசாமல் மிரட்டும் தோணியில் பேசியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!