கன்னியாகுமரியில் வெளுத்து வாங்கிய கனமழை

கன்னியாகுமரியில்  வெளுத்து வாங்கிய கனமழை
X

கன்னியாகுமரியில் கன மழை பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடங்கிய கனமழை நீடித்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் நாகர்கோவில், சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம் உட்பட மாவட்டம் முழுவதும் இரவு 11 மணிக்கு தொடங்கிய மழையானது தொடர்ந்து நீடித்து வருகிறது.

தொடர்ந்து நீடித்து வரும் கனமழையால் மாவட்டத்தில் வெப்பம் முழுமையாக நீங்கி குளிர்ச்சியான நிலை நிலவி வருவதோடு தொடர் மழையால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் மலையோர பகுதிகளிலும் நீடிக்கும் மழையால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு1, சிற்றாறு 2 உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்து உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture