குமரியில் கனமழையால் வெள்ள பெருக்கு: 12 கிராமங்களுக்கான சாலைகள் துண்டிப்பு

குமரியில் கனமழையால் வெள்ள பெருக்கு: 12 கிராமங்களுக்கான சாலைகள் துண்டிப்பு
X

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.

குமரியில் கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு 12 கிராமங்களுக்கான சாலைகள் துண்டிக்கப்பட்டன.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கிய கனமழையானது விடிய விடிய பெய்த தோடு தற்போதும் தொடர்ந்து வருகின்றது.

16 மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழையால் அணைகளில் இருந்து பெருமளவில் நீர் திறந்து விடப்பட்டதால் கோதையாறு, திற்பரப்பு, தாமிரபரணி ஆறு போன்ற பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்கு மழைநீர் காட்டாற்று வெள்ளமாக ஓடுகிறது.

இதனிடையே கோதையாறு பகுதியில் உருவான காட்டாற்று வெள்ளத்தில் சாலைகள் மூழ்கியதால் 12 மலை கிராமங்களுக்கான சாலைகள் துண்டிக்கப்பட்டன. மேலும் களியல், குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கான பொது போக்குவரத்தும் முடங்கியது.

Tags

Next Story
smart agriculture iot ai