மூதாட்டி கொரோனாவிற்கு பலி - அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல்

மூதாட்டி கொரோனாவிற்கு பலி - அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல்
X
குமரியில் மூதாட்டி கொரோனாவிற்கு பலியாகி இருப்பதாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இருப்பினும் கடந்த சில நாட்களாக கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது .

இதனால் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது, இந்நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதனை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!