கையுறைகளை தெருவில் வீசிச்சென்ற வாக்காளர்கள்

கையுறைகளை தெருவில் வீசிச்சென்ற வாக்காளர்கள்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர்கள் வீசி சென்ற கையுறைகளை, கவச உடை அணிந்து அகற்றிய மாநகராட்சி பணியாளர்களை அனைவரும் பாராட்டினார்கள்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வாக்குச்சாவடிகளில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.குறிப்பாக வாக்காளர்களுக்கு கையுறைகள் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 15 லட்சம் கையுறைகள் வந்திருந்தன. வாக்குபதிவின் போது வாக்குச்சாவடிகளில் கையுறைகள் வழங்கப்பட்டன. வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கையுறைகளை வாக்களித்ததும் அங்குள்ள குப்பை தொட்டியில் போட வசதியாக நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது.

ஒரு சில வாக்குச்சாவடிகளில் குப்பைத் தொட்டிகள் இருந்தும் வாக்காளர்கள் கையுறைகளை தெருவில் தான் வீசி சென்றனர். இந்நிலையில் நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் கொரோனா கவச உடை அணிந்து மாநகராட்சி பணியாளர்கள் கையுறைகளை அப்புறப்படுத்தினர். பின்னர் இவைகள் வலம்புரிவிளை குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டன.

Tags

Next Story