குமரியில் முழு ஊரடங்கு - பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு

குமரியில் முழு ஊரடங்கு - பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு
X

முழு ஊரடங்கில் வெறிச்சோடிய சாலை

குமரியில் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று ஒருநாள் ஊராடங்கை அரசு அறிவித்து உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கான கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

அரசு பேருந்துகள் உட்பட எந்த வாகனங்களும் இயக்கப்படாததால் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதோடு சாலையில் அவசிய தேவைகளுக்காக வாகனங்களில் வரும் அனைவரையும் தீவீர விசாரணைக்கு பிறகே போலீசார் அனுமதித்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி