கன்னியாகுமரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

கன்னியாகுமரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
X
குமரி மாவட்டத்தில் காதலிப்பதாக கூறி ஏமாற்றி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், அனந்தபாலம் பகுதியை சேர்ந்தவர் ஆல்டோ மைக்கிள் டோனிக் (21), இவர் குளச்சல் வாணியக்குடி பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி வந்துள்ளார்.

இதனிடையே உலக்கை அருவி பகுதியில் ஒரு வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்ற ஆல்டோ மைக்கிள் டோனிக் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இந்த தகவலை சிறுமி மூலம் அறிந்த சிறுமியின் தாயார் நாகர்கோவிலில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது குறித்து காவல் நிலைய ஆய்வாளர் வனிதா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்தனர்.

மேலும் சம்பவம் அன்று குற்றவாளிக்கு உதவி செய்த அவரின் நண்பர்களான கோட்டார் பகுதியை சேர்ந்த சூர்யா (20) என்ற தளபதி சூர்யா மற்றும் கிஷோர் குமார்(19), காட்வின் மேஸ்வாக்(21), ஆகியோரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு