வெள்ளப் பாதிப்பின் போது உதவிய மீனவர்களுக்கு குமரி காவல்துறை பாராட்டு

வெள்ளப் பாதிப்பின் போது  உதவிய மீனவர்களுக்கு குமரி காவல்துறை பாராட்டு
X

கன்னியாகுமரியில் வெள்ப்பாதிப்பின்போது உதவிய மீனவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் சால்வை அணிவித்து பாராட்டினார்.

குமரியில் வெள்ள பாதிப்பின் போது மீட்பு பணிக்கு உதவிய மீனவர்களுக்கு காவல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 21 வாரத்திற்கு முன்பு பெய்த அதி தீவிர கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்தது.

அப்போது மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பாதிப்பு ஏற்பட்டபோது உயிருக்கு போராடிய பொதுமக்களை காப்பாற்ற மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து படகுடன் வந்து மீனவர்கள் உதவி செய்தனர்.

அதன்படி படகுகளுடன் வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட மேலமணக்குடி, ஆரோக்கியபுரம் மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களை பாராட்டும் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் மேலமணக்குடி அந்த்ரேயர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் உதவிசெய்த அனைத்து மீனவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி, வெள்ளபெருக்கில் அவர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னார்வலராக வந்து உதவி செய்ததை குறிப்பிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா மற்றும் காவல் அதிகாரிகள், ஆரோக்கியபுரம் பங்குதந்தை, மீனவ பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!