ரயிலில் 2 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்: 5 பேர் கைது

ரயிலில் 2 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்: 5 பேர் கைது
X
மும்பையில் இருந்து ரயிலில் கடத்திய 2 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் போலீசார் நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு இரண்டு மோட்டார் சைக்கிளுடன் 5 வாலிபர்கள் சந்தேகப்படும்படி கைப் பையுடன் நின்று கொண்டிருந்தனர், அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்து, பையை சோதனை செய்தனர். அதில் இரண்டு கிலோ கஞ்சா மற்றும் 300 போதை மாத்திரைகள் இருந்தன.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவில் விளையை சேர்ந்த அருண்(23), ரத்தினம் வயது( 22) மற்றும் புத்தளத்தை சேர்ந்த பிரபாகரன் (22), ஆரோக்கியராஜ் (22) மற்றும் இருளப்பபுரம் விஜயன் (30) என்பது தெரிய வந்தது. மும்பையில் இருந்து ரயில் மூலம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்து குமரி மாவட்டத்தில் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 5 பேரையும் கைது செய்த போலீசார், 2 மோட்டார் சைக்கிள்களையும் செய்தனர்.

Tags

Next Story
ai solutions for small business