தூத்தூர் பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம்

தூத்தூர் பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள். 

குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் கேட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரையுமன்துறை முதல் நீரோடி வரையிலான மீனவ கிராமங்களை உள்ளடக்கியது தூத்தூர் மீனவ மண்டலம். ஆழ்கடலில் மீன்படிக்கும் மீனவர்கள் அதிகம் கொண்ட இந்த மீனவகிராமத்தில், 710 விசைபடகுகள், 2250 நாட்டுபடகுகள் உள்ளன.

இப்பகுதியில் மாவட்டத்தில் மூன்றாவது மீனவளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. எனினும் இந்த அலுவலகத்தை தூத்தூர் பகுதியில் அமைக்காமல் தேங்காய்பட்டணம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் அமைக்க, அதிகாரிகள் முயற்சி எடுத்து வருவதாக மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, ஆழ்கடல் மீனவர்கள் அதிகம் கொண்ட தூத்தூர் பகுதியில் பொதுமக்களால் மீனவளத்துறைக்கு வழங்கபட்ட ஒரு ஏக்கர் நிலத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் அமைக்க கேட்டும், இரையுமன்துறை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரியும், கடலரிப்பால் சேதமடைந்து பல வருடங்களாக துண்டிக்கபட்டிருக்கும் வள்ளவிளை இடர்பாடு சாலையை சீரமைக்ககோரியும் மீனவ மக்கள் பேரவை சார்பில் தூத்தூர் மீனவளத்துறை ஆய்வாளர் அலுவலகம் முன்பு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன போராட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story