ஆர்.எஸ்.எஸ் சார்பில் மீனவ இளைஞர்களுக்கு யோகா பயிற்சி

ஆர்.எஸ்.எஸ் சார்பில் மீனவ இளைஞர்களுக்கு யோகா பயிற்சி
X
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் மீனவ இளைஞர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

சர்வதேச யோகா தினம் ஆண்டு தோறும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது, கொரோனா விதிமுறைகள் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் யோகா தின கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் கொரோனா பரவலை தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகா பயிற்சிகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் ஆர் எஸ் எஸ் அமைப்பு சார்பில் 50க்கும் மேற்பட்ட மீனவ இளைஞர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. யோகா பயிற்சியின் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் உடலை உறுதியாக பராமரிக்க முடியுமெனவும் பல்வேறு ஆசனங்கள் மூலம் விளக்கப்பட்டது.

இது தொடர்பாக மீனவ இளைஞர்கள் கூறுகையில் யோகா பயிற்சி என்பது மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு புதுமையாக இருப்பதாகவும் தொடர்ந்து இப்பயிற்சியை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!