தேர்தல் பணி: காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தேர்தல் பணி: காவலர்களுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
X

எஸ்பி தலைமையில் நடைபெற்ற கூட்டம்.

தேர்தல் பணியை தொடர்ந்து குமரி காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு காவல்துறையினருக்கு பணிகள் ஒதுக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பல முன்னேர்ப்பு நடவடிக்கைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மேற்கொண்டு வருகின்றார்.

அதன் ஒரு பகுதியாக இன்று மாவட்ட ஆயுதப்படையில் வைத்து தேர்தலில் வாக்கு பெட்டிகளை கொண்டு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மொபைல் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தேர்தல் தொடர்பான அறிவுரைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார். அதில் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும், வாக்கு பெட்டிகளை கவனமுடன் கையாள வேண்டும் என்றும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் கவனமாக பணியாற்ற வேண்டும். என்றும், பல அறிவுரை வழங்கினார். இதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!