குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை  விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
X
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு குமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 -ஆம் தேதி நடைபெற உள்ளது.ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்று உள்ளது.

தேர்தலுக்கான வாக்கு பதிவு பெரும்பாலும் பள்ளிகளிலேயே நடைபெறும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 19.2.2022 -ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
சத்தியமங்கலத்தில் விசிக ஆர்ப்பாட்டம்...! அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்கள்..!