போதைப் பொருட்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க டிப்ளமோ பயிற்சி

போதைப் பொருட்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க டிப்ளமோ பயிற்சி
X

போதை நோய் நலப்பணி இயக்கத்தின் இயக்குனர் அருள்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் 

குமரியில் முதன்முறையாக போதைப் பொருட்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க டிப்ளமோ பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது.

போதை நோய் நலப்பணி இயக்கத்தின் இயக்குனர் அருள்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசின் ( NASHA MUKT BHARATH ) திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்திலேயே முதல் முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் இல்லாத இந்தியாவை உருவாகும் டிப்ளமோ பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. ஒரு புறம் போதை ஒழிப்பு முயற்சிகள் தொடர்ந்தால், மறுபுறம் டாஸ்மார்க் கடைகள் போதைக்கு வளர்ச்சியாக இருப்பதாகவும், குமரி மாவட்டத்தில் இரண்டு குடும்பங்களை எடுத்து கொண்டால் அதில் ஒரு குடும்பம் போதைக்கு அடிமை பட்டியலில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் கள ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. எனவே மக்கள் மத்தியில் போதை வேண்டாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த பயிற்சியின் நோக்கம் ஆக உள்ளது என தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture