கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வீடியோ - மக்களிடையே வரவேற்பை பெற்றது

கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வீடியோ - மக்களிடையே வரவேற்பை பெற்றது
X

குமரியில் வைரலான கொரோனா விழிப்புணர்வு வீடியோ ( கலெக்டர் பைல் படம்)

குமரியில் உயர் அதிகாரிகளின் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வீடியோ வைரல் ஆகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது, கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடி மையங்கள், அங்கன்வாடிகள், சமூக நல கூடம் என 624 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இது குறித்து பொதுமக்களிடையே கடந்த ஒரு வாரமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என மாவட்ட உயர் அதிகாரிகளின் விழிப்புணர்வு பேச்சு குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story
ai marketing future