குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 318 நபர்களுக்கு கொரோனா

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 318 நபர்களுக்கு கொரோனா
X
- தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 318 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது, தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1966 ஆக உள்ளது,

இவர்களில் 515 நபர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் 955 நபர்கள் கோவிட் கேர் சென்டர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் 496 நபர்கள் வீட்டு தனிமையில் சிகிச்சையில் உள்ளனர்.

இதுவரை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 22961 (இருபத்தி இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி ஒன்று ) ஆக உள்ள நிலையில் இவர்களில் 20240 ( இருபதாயிறத்து இருநூற்று நாற்பது ) நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை முதற்கட்ட கொரோனா தடுப்பூசி மருந்து 90082 ( தொண்ணூறாயிறத்து என்பத்தி இரண்டு ) நபர்களுக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்து 31024 ( முப்பத்தி ஒன்றாயிறத்து இருபத்தி நான்கு ) நபர்களுக்கும் செலுத்தப்பட்டு உள்ளது.

முக கவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட காரணங்களுக்காக இதுவரை 44550 ( நாற்பத்தி நான்காயிரத்து ஐநூற்று ஐம்பது ) நபர்களிடம் இருந்து ரூபாய் 8656826 ( என்பத்தி ஆறு லட்சத்து ஐம்பத்தி ஆராயிரத்து எண்ணூற்று இருபத்தி ஆறு ) அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.

கோரோணாவை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து நோயற்ற நிலையை உருவாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!