சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி - குமரி இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்தன

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி -  குமரி இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்தன
X
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற குமரி இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்தன.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தலக் குறிச்சி பகுதியைச் சார்ந்த கிருஷ்ணராஜ், ஓமனா தம்பதியர்களின் மகனான பிரதீப், இவர் இந்திய அளவில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் 343 வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

முதல் முயற்சியில் வெற்றி பெறமுடியாத நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக கடுமையான முயற்சியினால் இந்த முறை வெற்றி பெற்றதாக தெரிவித்த அவர் கடுமையான முயற்சியினாலும் பெற்றோர்கள், நண்பர்களின் ஒத்துழைப்பாலும் இந்த முறை வெற்றி பெற முடிந்தது என தெரிவித்தார்.

இதற்காக துணை நின்ற அனைவருக்கும் தன்னுடைய மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தார். இந்த வெற்றியை தொடர்ந்து அவருடைய பெற்றோர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
scope of ai in future