நண்பர்களிடையே மாேதல்: சிறையிலிருந்து விடுதலையானவருக்கு கத்திக்குத்து

நண்பர்களிடையே மாேதல்: சிறையிலிருந்து விடுதலையானவருக்கு கத்திக்குத்து
X

நித்திரவிளை அருகே மது போதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் படுகாயமடைந்த சுனிலை மீட்டு ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சிறையில் இருந்து விடுதலையாகி வந்தவரை குத்தி கொல்ல முயற்சி மேற்கொண்ட 5 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே நம்பாளி பகுதியை சேர்ந்தவர் சுனில், கூலித்தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையாகி மது போதையில் ஏற்பட்ட தகராறில் தனது நண்பர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக சிறையில் இருந்த சுனில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் விடுதலையாகி வந்துள்ளார்.

இந்நிலையில் நித்திரவிளை அருகே காணிவிளை பகுதியை சேர்ந்த அண்ணன் தம்பிகளான சிபின், சஜின், கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த அஜின் மற்றும் பிபின் ஆகியோரோடு சேர்ந்து சுனில் நடைக்காவு மதுக்கடையில் இருந்து மது வாங்கி குடித்துள்ளனர்.

மது போதை தலைக்கேற 5 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த சிபின் கையில் வைத்திருந்த குவாட்டர் பாட்டிலை எடுத்து சுனிலின் பின்னால் முதுகு பகுதியில் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுனில் சத்தம் போடவே நண்பர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த சுனில் தானாக 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் செவிலியர் ரோட்டில் விழுந்து கிடந்த சுனிலை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளித்து குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார், இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த அஜின் என்பவரை கைது செய்த போலீசார் அவனிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சிபின், சஜின் மற்றும் பிபின் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers