குமரி கடற்கரையை தூய்மைப்படுத்திய கல்லூரி மாணவர்கள்

குமரி கடற்கரையை தூய்மைப்படுத்திய கல்லூரி மாணவர்கள்
X

கடற்கரையை தூய்மைப்படுத்திய மாணவர்கள். 

கன்னியாகுமரியில் கடற்கரையை கல்லூரி மாணவர்கள் தூய்மைப்படுத்தினர்.

இயற்கை எழில் கொண்ட சுற்றுலா தலங்களை கொண்ட மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது. கன்னியாகுமரி முதல், நீராடி காலனி வரையிலான 47 மீனவ கிராமங்களில் அமைந்துள்ள பெரும்பாலான கடற்கரை பகுதி சுற்றுலா தலமாக உள்ளது. இந்த கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா வரும் பயணிகள், தங்கள் கொண்டு வரும் உணவு பொருட்கள், பேப்பர் போன்றவற்றை அங்கேயே விட்டுவிட்டு செல்வதால், கடற்கரை பகுதிகள் குப்பைகள் தேங்கி மோசமாக காணப்பட்டது.

இந்நிலையில், கன்னியாகுமரி அருகே துவாரகா பதியில் இருந்து, மணக்குடி வரை 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரையை, 150 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் சுத்தம் செய்தனர். தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையும் தேசிய பசுமை படையும் இணைந்து நடத்திய இந்த கடல் தூய்மை பணி, மீனவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story