குமரியில் ரூ. 300 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் :கலெக்டர் ஆய்வு

குமரியில் ரூ. 300 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் :கலெக்டர் ஆய்வு
X

 தேங்காப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் மற்றும் இரையுமன்துறை பகுதியில் சுமார் ரூ. 300 கோடி மதிப்பில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

குமரியில் ரூ. 300 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தேங்காப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் மற்றும் இரையுமன்துறை பகுதியில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். .அப்போது கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டிணத்தில் ரூ. 60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள கூடுதல் கட்டமைப்பு வசதிக்கான கட்டுமான பணியினை விரைந்து செயல்படுத்துமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அங்கு மீனவர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Tags

Next Story
சத்தியமங்கலத்தில் விசிக ஆர்ப்பாட்டம்...! அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்கள்..!