தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றவில்லை - அர்ஜுன் சம்பத்

தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றவில்லை - அர்ஜுன் சம்பத்
X

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றவில்லை என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை தமிழக முதல்வர் நிறைவேற்ற வில்லை.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக முதல்வர் ஸ்டாலின், அறநிலையத்துறை சார்ந்த வாக்குறுதிகளையேனும் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கிறேன்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனை கட்சியில் இருந்து ஒதுக்குவதாக கூறப்படுவது தவறான தகவல், சிலர் எரிச்சல் காரணமாக இப்படி ஒரு தகவலை கூறுகின்றனர், பாஜக கட்சி குடும்ப கட்சி அல்ல என தெரிவித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!