வீர தாய் பதக்கம் பெற்ற பெண்ணுக்கு பாஜகவினர் மரியாதை
ராணுவத்தால் வழங்கப்பட்ட வீர தாய் பதக்கம் பெற்ற பெண்ணியை பா.ஜ.கவினர் சந்தித்து பாராட்டி மரியாதை செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் ராணுவத்தில் பணியாற்றியதை கௌரவிக்கும் வகையில், அந்த குடும்ப தலைவிக்கு இந்திய ராணுவம் சார்பில் வீரத்தாய் பதக்கம் வழங்கப்பட்டது.
களியக்காவிளை அருகே உள்ள மீனச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரிகா தேவி (71), இவரது கணவர் தனஜயன்நாயர் ராணுவத்தில் பணியாற்றியவர்.
இத்தம்பதிக்கு 5 மகன்கள் உள்ளனர், அவர்களில் வனஜெயன் (3 ஆவது), தவுகித்திரி ஜெயன் (4 ஆவது) ஆகிய இரு மகன்களையும் அக்குடும்பத்தினர் ராணுவத்துக்கு அனுப்பியுள்ளார்.
ஒரே குடும்பத்தில் தந்தை, இரு மகன்கள் ராணுவத்தில் பணியாற்றி நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டதை கவுரவிக்கும் வகையில், குடும்பத் தலைவியான சந்திரிகா தேவிக்கு இந்திய ராணுவம் சார்பில் வீரத்தாய் விருது மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
ராணுவ அதிகாரி அவரது வீட்டுக்கு வந்து இந்த விருதை வழங்கினர், சந்திரிகா தேவியின் கணவர் அரை நூற்றாண்டுக்கு முன் பாகிஸ்தான், சீனா நாட்டுடனான போரில் பங்கேற்ற ராணுவவீரர் என்பதும் பணி ஓய்வுக்குப் பின் 83 ஆவது வயதில் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சந்திரிகா தேவி கூறும் போது இரு மகன்கள் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை நினைத்து பெருமைப்படுகிறேன், இந்த விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.
இந்நிலையில் வீர தாய்க்கு இன்று பாஜக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரும் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர் காந்தி பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu